இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் சுரேஷ் ரெய்னா, தனது நீண்ட நாள் தோழியான பிரியங்கா சவுத்ரியை நேற்று திருமணம் செய்து கொண்டார். இவர்...
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் சுரேஷ் ரெய்னா, தனது நீண்ட நாள் தோழியான பிரியங்கா சவுத்ரியை நேற்று திருமணம் செய்து கொண்டார்.
இவர்களது திருமணத்தில் பி.சி.சி.ஐ. முன்னாள் தலைவர் சீனிவாசன், இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் டோனி, அவரது மனைவி சாக்ஷி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரெய்னாவுடன் இணைந்து விளையாடிய மேற்கிந்திய தீவுகள் வீரர் டுவெய்ன் பிராவோ மற்றும் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளம்மிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் இந்திய அணியின் துணை அணித்தலைவர் கோஹ்லி, தன் காதலியான அனுஷ்கா சர்மாவுடன் பங்கேற்றார்.
தவிர, இந்திய அணியின் வீரர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். இந்திய பிரதமர் மோடி, சுரேஷ் ரெய்னாவிற்கு கடிதம் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.