அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் ஆழ்ந்த அனுதாபங்கள் தெரிவிப்பு
காலஞ்சென்ற சவுதி அரேபியாவின் மன்னர் அப்துல்லாபின் அப்துல் அஸீஸின் மறைவையொட்டி முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் மற்றும் தபால் திணைக்கள அமை...

காலஞ்சென்ற சவுதி அரேபியாவின் மன்னர் அப்துல்லாபின் அப்துல் அஸீஸின் மறைவையொட்டி முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் மற்றும் தபால் திணைக்கள அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் இலங்கை வாழ் முஸ்லிம்கள் சார்பாகவும் அரசாங்கத்தின் சார்பாகவும் மன்னரின் குடும்பத்தாருக்கும், அந்நாட்டு மக்களுக்கும் தனது ஆழ்ந்த அனுதாபங்களையும், கவலையையும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஜனாதிபதியின் பணிப்பின் பெயரில் மன்னர் குடும்பத்தினருக்கும் அந்நாட்டு மக்களுக்கும் தனது அனுதாபச் செய்திகளை நேரடியாக தெரிவிப்பதற்கான குழுவில் அமைச்சர் றவுப் ஹக்கீம், உள்ளிட்ட குழுவில் அமைச்சர் ஹலீமும் நேற்றுச் (23) சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் தனது அமைச்சுப் பொறுப்பை பொறுப்பேற்ற பின்னர் செல்லும் முதலாவது வெளிநாட்டுப் பயணம் இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.