“மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் தோல்வியடைவார்”. ஜனாதிபதியின் இன்றைய விஷேட உரையின் சில விடயங்கள் இதோ.(video)
மஹிந்த ராஜபக்ஷ ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக இருந்திருந்தால் 100 நாட்களுக்குள் மக்களுக்கு இத்தனை வசதிகளையும், சலுகைகளையும் வழங...

மஹிந்த ராஜபக்ஷ ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக இருந்திருந்தால் 100 நாட்களுக்குள் மக்களுக்கு இத்தனை வசதிகளையும், சலுகைகளையும் வழங்கியிருக்க முடியாது.
ஆனாலும், மிக மோசமானவன், காட்டிக் கொடுப்பவன் என்று என் அளவுக்கு வேறு எந்த ஜனாதிபதியும் விமர்சனங்களுக்கு உள்ளானதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
ஜனாதிபதி செயலகத்தில் இருந்து தற்போது நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றிக் கொண்டிருக்கும் அவர் தொடர்ந்தும் தெரிவிப்பதாவது:
துரோகி என்று என்னை விமர்சனம் செய்யும் அளவுக்கு தற்போது நாட்டில் ஜனநாயகம் உள்ளது.
மஹிந்தவுக்கு வேட்புமனு வழங்கியதற்கு நானும் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கிறேன்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தோற்றதுபோல, மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் தோல்வியடைவார், அவருக்கு வேட்பு மனு வழங்கியதில் எனக்கு உடன்பாடில்லை”
இது மஹிந்தவின் தவறல்ல. ஜே.ஆர். காட்டித் தந்த முறைமையின் வடிவம் இப்படித்தான் இருக்கும்.
எனது 44 வருட அரசியல் வாழ்க்கையே என்னை பொது அபேட்சகராக நிறுத்தியதற்கு காரணமாகும்.
கட்சி தலைவராக இருந்ததற்கும் சிலர் என்னை குறை சொன்னார்கள். ஆனால், நான் அந்தப் பதவியில் இருந்ததனால்தான் அரசின் முக்கிய வேலைத் திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுக்க முடிந்தது.
நான் நட்சத்திரம் பார்த்து எதிர்காலத்தைக் கணிப்பிடுவதில்லை. ஆனால், வரலாறு பார்த்து எதிர்காலம் பற்றி கணித்துச் சொல்ல முடியும்.
சுதந்திரக் கட்சியை இரண்டாகப் பிளக்கும் எண்ணமும் எனக்கில்லை. D C
கட்சியில் இருந்து கேட்டு விலகுவதற்கான தேவையும் எனக்கில்லை. அப்படி நான் கேட்டு விலகியிருந்தால் மஹிந்தவுக்கு தேவையான விதத்தில் வேட்புமனுவில் ஆட்களை உள்வாங்கியிருப்பார். கட்சி எப்படிப் போனாலும், ஜனவரி 8ஆம் திகதி நான் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றும் பாராளுமன்றொன்றே எனது தேவை.
பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டுவந்து, சுதந்திர முன்னணியின் தேசிய பட்டியல் ஊடாக மஹிந்தவை பாராளுமன்றம் கொண்டு வருவதற்கும் அவர்கள் திட்டமிட்டிருந்தார்கள். நான் அவர்களது சகல முயற்சிகளையும் முறியடித்தேன்.
மஹிந்தவுடன் எனக்கு எதுவித கொடுக்கல் வாங்கல்களுமில்லை. அவருக்கு எனது எதிர்ப்பைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டின் பிரதமராக பிறிதொருவர் வருவதை மஹிந்த தடுக்க முயல்கிறார். மஹிந்த அணி வெற்றிபெற்றாலும், பிரதமர் பதவியில் அமர்த்துவதற்கு அக்கட்சியில் வேறு சிரேஷ்ட உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.
சவால்களுக்கு மத்தியில் என்னிடம் ஒப்படைக்கப்பட்ட ஜனநாயகத்தை நான் ஒருபோதும் தவறாக பயன்படுத்த மாட்டேன். பொதுத் தேர்தலை நீதியும் சுதந்திரமுமாக நடத்துவதற்கு நான் ஒத்துழைப்பேன். மஹிந்தவுக்கு கூட்டமைப்பில் வேட்புமனு கொடுக்கப்படாதிருந்திருந்தாலும், அவர் பிறிதோர் கட்சியில் போட்டியிட்டிருப்பார். மத்திய வங்கியின் ஆளுநரைப் பதவி விலக்கினால் சிறப்பாக இருக்கும் என நான் ரணில் விக்கிரமசிங்கவிடம் கூறியிருக்கிறேன் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.