மஹிந்தவின் வேட்புமனு தொடர்பில் சுசில் பிரேமஜயந்த மீது ஐக்கிய தேசியக் கட்சிக்கு சந்தேகம்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளர் சுசில் பிரேம்ஜயந்த மீது ஐக்கிய தேசியக் கட்சி சந்தேகம் வெளியிட்டுள்ளது. தமது இல்லத்தில் கடந...

http://kandyskynews.blogspot.com/2015/07/blog-post_74.html

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளர் சுசில் பிரேம்ஜயந்த மீது ஐக்கிய தேசியக் கட்சி சந்தேகம் வெளியிட்டுள்ளது.
தமது இல்லத்தில் கடந்த வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற இரகசிய கூட்டம் தொடர்பில் கேள்வி எழுந்துள்ளதாக ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சா டி சில்வா தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி படங்களின்படி பிரேமஜயந்தவின் வீட்டில் இருந்து முன்னர் அமைச்சர் பெசில் ராஜபக்ச உட்பட்டவர்கள் வெளியேறிச்செல்வது தெரிகிறது.
பசில் ராஜபக்சவுடன் சந்திப்பை நடத்தவில்லை என்று பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
இருப்பினும் தனிப்பட்ட சந்திப்பு ஒன்று இடம்பெற்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை கடந்த சில நாட்களாக வெளிநாட்டில் தங்கியிருந்த சுசில் பிரேமஜயந்த, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினரை சந்தித்தமை சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்று மேல் மாகாணசபை உறுப்பினர் எஸ் எம் மரிக்கார் தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ச, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கீழ் பொதுத்தேர்தலில் போட்டியிடுவார் என்று சுசில் பிரேமஜயந்தவே நேற்று அறிவித்ததன் பின்னரே இந்த சந்தேகத்தை ஐக்கிய தேசியக் கட்சி வெளியிட்டுள்ளது.