இணையத்திலிருந்து பௌத்த பிக்குகளை தூக்குமாறு ஜனாதிபதி உத்தரவு
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் காணப்படும் பௌத்த துறவிகளுடனான படங்களை அகற்றி விட்டு நாட்டின் அமைதியை ப...

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் காணப்படும் பௌத்த துறவிகளுடனான படங்களை அகற்றி விட்டு நாட்டின் அமைதியை பேணும் வகையிலான படங்களை பிரசுரிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
தற்போது இந்து குருமாரின் படங்களும் பிரசுரிக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே பல்லின நாடு ஒன்றின் ஜனாதிபதியின் இணைத்தளத்தில் பௌத்த துறவிகளுடன் மாத்திரம் ஜனாதிபதி இருக்கும் படங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளமையானது நாட்டின் சமாதானத்துக்கு உகந்ததல்ல என்று சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
இந்தநிலையில் தற்போது சிறுவர்களுடன் ஜனாதிபதி இருக்கும் படம் உட்பட்ட நான்கு புதிய படங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளன.
தேசியக்கொடியின் சிங்களவர்களை குறிக்கும் வாளேந்திய சிங்கம் மாத்திரம் பிரகாசமாக உள்ளமை சுட்டிக் காட்டத்தக்கது.(J)