தேர்தல் சட்ட மீறல் தொடர்பில் மேலும் பல முறைப்பாடுகள்
தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் கிடைத்துள்ள முறைப்பாடுகள் 90 ஆக அதிகரித்துள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. புதிய நியமனம், ப...


தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் கிடைத்துள்ள முறைப்பாடுகள் 90 ஆக அதிகரித்துள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.
புதிய நியமனம், பதவி உயர்வு மற்றும் இடமாற்றும் என்பன குறித்து 59 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக செயலகத்தின் முறைப்பாட்டு பணியகம் குறிப்பிட்டுள்ளது.
பொருட்கள் பகிர்ந்தளித்தமை குறித்து 12 முறைப்பாடுகள் பதிவாதியுள்ளதாகவும் தேர்தல்கள் செயலகத்தின் முறைப்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.
மேலும் சட்டவிரோத சுவரொட்டிகள் கட்டவுட் என்பன தொடர்பில் 08 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.
இதவேளை தேர்தல் வன்முறை சம்பவம் குறித்து ஒரு முறைப்பாடு பதிவாகியுள்ளதாகவும் தேர்தல்கள் செயலகத்தின் முறைப்பாட்டு பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.