சதமடித்து இலங்கை அணியின் வெற்றியை உறுதிசெய்த குசல் பெரேரா
இலங்கை ஏ அணிக்கும் பாகிஸ்தான் ஏ அணிக்கும் இடையிலான உத்தியோகப்பற்றற்ற முதலாவது ஒருநாள் போட்டி நேற்றைய தினம் மாத்தறை உயன் வட்ட மைதானத்தில் இட...


இலங்கை ஏ அணிக்கும் பாகிஸ்தான் ஏ அணிக்கும் இடையிலான உத்தியோகப்பற்றற்ற முதலாவது ஒருநாள் போட்டி நேற்றைய தினம் மாத்தறை உயன் வட்ட மைதானத்தில் இடம்பெற்றது.
இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் ஏ அணியினர் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தனர். இதன்படி பாகிஸசதான் அணியினர் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 203 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டனர். அணி சார்பில் பவாட் அலம் மாத்திரம் அரைச்சதமடித்து 58 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.
இலங்கை ஏ அணி சார்பாக பந்துவிச்சில் சமீர 3 விக்கெட்டுக்களையும், கமகே, ஜயசூரிய மற்றும் கௌசால் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை ஏ அணியினர் 32.2 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. இதில் குசல் பெரேரா 88 பந்துகளில் 114 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். அத்துடன் அசான் பிரியஞ்ன் 57 ஓட்டங்களைப் பெற்றுக்ககொண்டார்.
இரண்டாவது போட்டி 29 ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.