திலங்க சமரசிங்கவுக்கு விசேட அதிரடிப்படையின் பாதுகாப்பு
ஆபத்தான ஔடதங்கள் தொடர்பான தேசியக் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் மருத்துவர் சமீர திலங்க சமரசிங்கவுக்கு விசேட பாதுகாப்பை வழங்க ஜனாதிபதி தீர...


நாளை முதல் திலங்க சமரசிங்கவுக்கு விசேட அதிரடிப்படையின் பாதுகாப்பை வழங்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஆபத்த ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவரின் பாதுகாப்பு தொடர்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
சமரசிங்கவின் பாதுகாப்பு பிரச்சினை குறித்த விடயத்தை உடனடியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கவனத்திற்கு கொண்டு சென்றதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி குறிப்பிட்டுள்ளார்.
ஹெரோயின் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடுபவர்கள் பற்றி தகவல்களை வெளியிட்டதன் காரணமாக திலங்க சமரசிங்கவுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.