தேர்தல் காலத்தில் அரச சொத்துக்க​ள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்க கோரிக்கை

தேர்தல் காலத்தில் அரச சொத்துக்கள் தவறாக கையாளப்படுவதை தடுப்பதற்காக மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் பரிந்துரைகளை கோரியுள்ளதாக பெப்ரல் அமைப்பு த...

தேர்தல் காலத்தில் அரச சொத்துக்க​ள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்க கோரிக்கை
தேர்தல் காலத்தில் அரச சொத்துக்கள் தவறாக கையாளப்படுவதை தடுப்பதற்காக மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் பரிந்துரைகளை கோரியுள்ளதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

தேர்தல் பிரசாரப் பணிகளுக்காக அமைச்சர்கள் அரச வளங்களை தவறாக பயன்படுத்துவதை தடுப்பதே இதன் நோக்கம் என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டிஆரச்சி கூறியுள்ளார்.

இலங்கை மனித உரிமைகள் ஆணையகத்தில் நேற்று (14) நடைபெற்ற கலந்துரையாடலின்போது இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பொதுத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் தேர்தல் சட்ட மீறல்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது.

எவ்வாறாயினும் தேர்தல் சட்டத்தை மீறுவோருக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதை இம்முறை தேர்தல்காலத்தில் காணக்கூடியதாக உள்ளதென கெஃபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார்.

தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் இதுவரை 108 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய தேர்தல் கண்காணிப்பு நிலையத்தின் தேசிய இணைப்பதிகாரி ரசாங்க ஹரிஸ்சந்திர குறிப்பிட்டுள்ளார்.

Related

தலைப்பு செய்தி 7288105503280281101

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item