நடுவீதியில் மானை வேட்டையாடிய சிங்கம் (PHOTOS)
சிங்கம் மானை வேட்டையாடும் காட்சியை தொலைக்காட்சியிலோ அல்லது திரையரங்குகளில் தான் பாத்திருப்போம். ஆனால் அதே சிங்கம் நடுரோட்டில் மானைக் கடித்த...


சிங்கம் மானை வேட்டையாடும் காட்சியை தொலைக்காட்சியிலோ அல்லது திரையரங்குகளில் தான் பாத்திருப்போம். ஆனால் அதே சிங்கம் நடுரோட்டில் மானைக் கடித்துக் குதறி துவம்சம் செய்யும் காட்சி தென் ஆபிரிக்காவின் க்ரூகர் பார்க்கில் இடம்பெற்றது.
அங்கு சிங்கங்களை பார்ப்பதற்காக பிரத்தியேக கார் சபாரி வசதி உண்டு. கடந்த வெள்ளியன்று, சுற்றுலாப் பயணிகள் அந்த காரில் சென்று கொண்டிருக்கும் போது, திடீரென ஒரு காட்டுமான் திடுதிடுவென சாலைக்குள் புகுந்து காரில் மோதியது.
ஐயோ பாவம் என்று அதைக் காப்பாற்றுவதற்காக காரிலிருந்து இறங்கப் போன ஒருவரை பக்கத்தில் இருப்பவர் இழுத்து உள்ளே போட்டார்.
காரணம் அந்த மானை விரட்டியபடி, ஒரு சிங்கமும் வந்தது. அந்த சிங்கம் வந்து சரியாக மானைக் கடித்துக் குதறவும் இன்னொரு சிங்கமும் போட்டி போட்டுக் கொண்டு சாலைக்கு வர, சபாரி பயணம் மேற்கொண்ட பயணிகள் தங்கள் முன் நடந்த ரத்த வேட்டையை கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தனர்.
இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை காணலாம்.



