ராஜிவ் காந்தி கொலையில் தண்டிக்கப்பட்டவர்களின் விடுதலை தொடர்பான வழக்கு விசாரணை ஆரம்பம்
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களை விடுதலை செய்வது தொடர்பான வழக்கு விசாரணையை இந்திய உச்ச நீதிமன...


ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களை விடுதலை செய்வதற்கு தமிழக அரசு மேற்கொண்ட தீர்மானத்தை ஆட்சேபித்து இந்திய மத்திய அரசாங்கம் வழக்கு தாக்கல் செய்திருந்தது.
மரண தண்டனையை குறைப்பதற்காக மனுகொடுத்த மூன்று குற்றவாளிகள் விடுதலை தொடர்பில் கோரிக்கை முன்வைக்காத நிலையில் அவர்களை தமிழக அரசு விடுவிப்பதற்கான காரணம் என்னவென மத்திய அரசாங்கம் தாக்கல் செய்துள்ள மனுவில் கேள்வி எழுப்பட்டிருந்தது
இந்த வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களை விடுதலை செய்வதற்கான அதிகாரம் மாநில அரசுக்கு உள்ளதா அல்லது மத்திய அரசாங்கத்திற்கு மாத்திரம் உள்ளதா என்பது தொடர்பிலும் வாதப் பிரதிவாதங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் இந்த வழக்கை அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என இந்திய உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த சதாசிவம் தலைமையிலான நீதிபதிகள் குழாம் கடந்த வருடம் அறிவித்திருந்தது.
முன்னதாக ராஜிவ் காந்தி கொலை வழக்கின் குற்றவாளிகளாக காணப்பட்ட முருகன், பேரறிவாளன்அ சாந்தன், ஆகியோரின் கருணை மனுக்கள் உள்ளிட்ட மேலும் பல வழக்குகளில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தவர்களின் கருணை மனுக்கள் மீதான பரிசீலனை தாமதமடைந்ததாக தெரிவித்து அவர்களின் மரண தண்டனையை உச்சநீதிமன்றம் ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவிட்டிருந்தது.
இந்த தீர்ப்பை அடுத்து ஆயுள் தண்டனை கைதிகளான பேரளிவாளன், முருகன், சாந்தன், நளினி உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்வதாக தமிழக அரசு அறிவித்திருந்தது.