மைத்திரி- ரணில் தேசிய அரசாங்கத்தில் 30 ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் இணைவு
கடந்த வெள்ளிக்கிழமையன்று மேற்கொள்ளப்பட்ட உடனடி தீர்மானம் ஒன்றின்படி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 30 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேசிய அரசாங...
http://kandyskynews.blogspot.com/2015/03/30.html

கடந்த வெள்ளிக்கிழமையன்று மேற்கொள்ளப்பட்ட உடனடி தீர்மானம் ஒன்றின்படி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 30 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேசிய அரசாங்கத்தில் இணைகின்றனர்.
இதன்படி இந்த 30 பேரில் 15 பேர் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாகவும் 15 பேர் பிரதியமைச்சர்களாகவும் நியமிக்கப்படவுள்ளனர்.
புதிய அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டம் முடிவடைய இன்னும் ஒருமாதம் இருக்கின்ற நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கையின் இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினருக்கான அமைச்சர்கள் பட்டியலில், எதிர்க்கட்சி தலைவர் நிமல் சிறிபால டி சில்வா, ஜோன் அமரதுங்கை, அநுர பிரியதர்சன யாப்பா அடங்கவில்லை.
இதன்பின்னர் தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கை 44 ஆக உயரவுள்ளது. ஏற்கனவே உள்ள 13 பிரதியமைச்சர்களும், 15 மேலதிக பிரதியமைச்சர்கள் இணைகின்றனர்.
இதனையடுத்து தேசிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை கூட்டம் நாளை 23ஆம் திகதியன்று நடத்தப்படவுள்ளதாக இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கிடையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இருந்து இராஜாங்க அமைச்சர்கள் 10 பேரை நியமிப்பது தொடர்பில் இன்று இறுதி முடிவெடுக்கப்படவுள்ளதாகவும் அந்த இணையத்தளம் தெரிவித்துள்ளது.
இதன்படி தற்போதுள்ள இராஜாங்க அமைச்சர்களின் எண்ணிக்கை 19 ஆக உயரும் சாத்தியங்கள் உள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் பிளவு
19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் தொடர்பான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாட்டால், அந்த கட்சிக்குள் பிளவு ஏற்படும் ஆபத்து உருவாகியுள்ளது.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் சர்வாதிகாரங்களை நீக்குவது தொடர்பான 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்துடன் தேர்தல் சீர்த்திருத்த சட்டத்தையும் கொண்டு வர வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எடுத்துள்ள தீர்மானத்தினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
19வது திருத்தச் சட்டத்துடன் தேர்தல் சீர்த்திருத்த சட்டத்தையும் கொண்டு வர வேண்டும் என்று குறிப்பாக நிமால் சிறிபால டி சில்வா தலைமையிலான தரப்பினரே வற்புறுத்தி வருகின்றனர். எனினும் அவர்களின் இந்த நிலைப்பாட்டை எதிர்க்கும் 19வது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவான குழுவும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் உள்ளது.
இவர்களில் 10 பேர் நாளைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து அமைச்சர் பதவிகளை பெற்றுக்கொள்ள உள்ளனர்.


Sri Lanka Rupee Exchange Rate