மைத்திரி - சந்திரிகா - ரணில் ரகசிய சந்திப்பு! அதிகாரத்தை தக்கவைக்க புது வியூகம்
சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிலங்கா, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரத்துங்க மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் இரகசிய சந்திப்ப...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_495.html

இந்த சந்திப்பின் போது ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்களை நாடாளுமன்றத்திற்கு வழங்குவது தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 18 ஆம் திகதி மூவருக்கும் இடையில் இடம்பெற்ற ரகசிய சந்திப்பில் இந்த இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாட்டின் மற்றும் அரசாங்கத்தின் தலைவராக ஜனாதிபதி செயற்படும் அதேவேளை, தன்னிச்சையாக முடிவெடுப்பதை தவிர்க்கும் வகையில் அமைச்சரவைக்கு அதிகாரங்களை வழங்குவதற்கும் இதன்போது இணக்கம் காணப்பட்டுள்ளது.
மேலும் ஜனாதிபதி எடுக்கும் சில முடிவுகளுக்கு பிரதமர் மற்றும் அமைச்சரவையின் ஆலோசனைகளை பெற்றுக்கொள்வது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
எனினும் குறித்த விடயங்களில் மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சிக் காலத்தில் மாற்றங்கள் செய்யாது, அடுத்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர் நடைமுறைப்படுத்துவதற்கும் நாடாளுமன்றத்திற்கும் அதிகாரங்கள் வழங்குவதற்கும் குறித்த சந்திப்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்மற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.


Sri Lanka Rupee Exchange Rate