மஹிந்தவுக்கு அஞ்சி தென்னந்தோப்பில் ஒழிந்திருந்த மைத்திரி
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அஞ்சி சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தென்னந்தோப்பு ஒன்றில் பதுங்கியிருந்ததாக கொழும்பு ஊடகம் ஒன...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_902.html
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அஞ்சி சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தென்னந்தோப்பு ஒன்றில் பதுங்கியிருந்ததாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் போது, மைத்திரிபால சிறிசேன பொதுவேட்பாளராக போட்டியிட்டார். தேர்தல் தினத்தன்று தனது வாக்கை அளித்த பின்னர் குடும்பத்துடன் தென்னந்தோப்பு ஒன்றில் பதுக்கி இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவு முழுவதும் அங்கேயே இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னாள் ஆட்சியாளர்களினால் பாதிப்புக்கள் ஏற்படலாம் என்ற அச்சம் காரணமாக இவ்வாறு ஒழிந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, குருணாகல் நகரில் இருந்து தூரத்தேயுள்ள தொடங்கஸ்லந்த என்ற தென்னந்தோட்டத்துக்கு மைத்திரிபால குடும்பத்தினர் இரவோடிரவாக சென்றனர். ஜனாதிபதி தேர்தல் முடிவு வெளியானதன் பின்னரே மைத்திரிபால சிறிசேன கொழும்புக்கு திரும்பியதாக அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே தாம் ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்தால் தமது குடும்பமே அழிக்கப்பட்டிருக்கும் என்று மைத்திரிபால பிபிசி செய்திச் சேவைக்கு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Sri Lanka Rupee Exchange Rate