எந்த நேரத்திலும் அமெரிக்கா மீது ஏவுகணை தாக்குதல் நடத்துவோம்: மிரட்டும் வடகொரிய தூதர் .
அமெரிக்கா மீது தாங்கள் எந்த நேரத்திலும் அணு ஆயுத ஏவுகணையை பயன்படுத்தி தாக்குதல் நடத்தலாம் என வடகொரியாவின் தூதர் மிரட்டல் விடுத்துள்ளார். ...

அமெரிக்கா மீது தாங்கள் எந்த நேரத்திலும் அணு ஆயுத ஏவுகணையை பயன்படுத்தி தாக்குதல் நடத்தலாம் என வடகொரியாவின் தூதர் மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து பிரித்தானியாவிலுள்ள வடகொரிய தூதர் ஹியூன் ஹக் போங்(Hyun Hak Bong) அளித்த பேட்டியில் கூறியதாவது, அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்த சட்டத்தில் கடந்த 1993ம் ஆண்டில் வட கொரியா கையெழுத்திட்டதால், நாங்கள் அமைதியாக இருந்துவிடுவோம் என அர்த்தம் அல்ல.
எங்களுக்கு அணு ஆயுதத்தை பயன்படுத்தும் திறன் இப்போதும் உள்ளது. எனவே அமெரிக்கா எங்களை அடித்தால் நாங்கள் திருப்பி அடிப்போம்.
நாங்கள் போரை விரும்பவில்லை. ஆனால் அமெரிக்கா சீண்டினால், வழக்கமான போருக்கும் தயாராக உள்ளோம், அணு ஆயுத போருக்கும் தயாராக உள்ளோம்.
அமெரிக்காவின் அணு ஆயுத அச்சுறுத்தலில் இருந்து மீள எங்களிடம் சக்தி உள்ளது என்றும் தேவைபட்டால் முன்கூட்டியே தாக்குதலும் நடத்துவோம் எனவும் பேட்டியளித்துள்ளார்.