இலங்கையில் மத சுதந்திரம் முன்னேற்றம் அடைந்துள்ளது -அமெரிக்கா
இலங்கையில் மத சுதந்திரம்,மனித உரிமைகள் மற்றும் சகிப்புத்தன்மை குறித்து ஆராய்வதற்காக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட அமெரிக்க பிரதிநித...

http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_915.html

சர்வதேச மதசுதந்திரம் குறித்த அமெரிக்க ஆணைக்குழு, இலங்கையில் தான் சந்தித்த அதிகாரிகள் தெரிவித்த கருத்துக்கள் நம்பிக்கையளிப்பவையாக காணப்பட்டதாக தெரிவித்துள்ளது.
இலங்கையின் அனைத்து மதத்தினர் மற்றும் இனத்தினர் மத்தியிலும் நல்லிணக்கம் அவசியம் என தெரிவிக்கப்பட்ட கருத்துக்களையும் அது வரவேற்றுள்ளது. குறிப்பிட்ட குழுவினர் தங்களது மூன்று நாள் விஜயத்தின்போது வெளிவிவாகர அமைச்சர் உட்பட பலரை சந்தித்து உரையாடியுள்ளனர்.
நாங்கள் சந்தித்த அதிகாரிகள் தெரிவித்த கருத்துக்கள் எங்களுக்கு நம்பிக்கையை அளித்துள்ளன. இலங்கையின் அனைத்து மதத்தினர் மற்றும் இனத்தினர் மத்தியிலும் நல்லிணக்கம் அவசியம் என தெரிவிக்கப்பட்ட கருத்துக்களையும் நாங்கள் வரவேற்கின்றோம்,பேரழிவை ஏற்படுத்திய யுத்தத்திற்கு பின்னர் கடந்த சில வருடங்களில் சிறுபான்மை மதத்தவர்கள் தாக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. புதிய அரசாங்கம் மதச்சிறுபான்மையினருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வது தேசிய ஐக்கியத்தை நோக்கிய சிறந்த விடயம் என அமெரிக்க ஆணைக்குழுவின் ஆணையாளர் எரிக் ஸ்வார்ட்ஸ் தெரிவித்துள்ளார்.
சிறுபான்மை மதத்தவர்களுக்கு எதிhன தாக்குதல்கள் கடந்த சில மாதங்களில் குறைந்துள்ளதாக அறிந்து மகிழ்ச்சியடைகின்றோம்,இவ்வாறான குற்றச்செயல்களுக்கு காரணமாணவர்களை நீதியின் முன்நிறுத்துமாறு நாங்கள் அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறோம்,பொறுப்புக்கூறல் என்பது பாதுகாப்பையும்,பாதிக்கப்பட்ட மக்களுக்கு நல்ல நம்பிக்கையும் அளிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.