வட பகுதிக்கு நாளை விஜயம் செய்யும் மைத்திரி, ரணில், சந்திரிகா

சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் நாளை வட பகுதிக்கு விஜயம் ...

சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் நாளை வட பகுதிக்கு விஜயம் செய்யவுள்ளனர். 

25 வருடங்களின் பின்னர் பொது மக்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்ட வளலாய் பகுதியை உத்தியோகபூர்வமாக அவர்களிடம் கையளிக்கும் நிகழ்வில் பங்கேற்கவுள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் புதிய அரசாங்கம் அமையப்பெற்றதன் பின்னர் பொதுமக்களுக்குச் சொந்தமான நிலங்கள் மீண்டும் மக்களிடத்தில் கையளிக்கப்படும் என கூறப்பட்டது. அத்துடன் வடக்கில் இராணுவத்தின் உயர்பாதுகாப்பு வலயங்கள் அமைந்துள்ள நிலப்பரப்பில் 1100 ஏக்கர் பரப்பளவுடைய நிலப்பரப்பு பொதுமக்களிடத்தில் விரைவில் கையளிக்கப்படும் என மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமி நாதன் தனது யாழ். விஜயத்தின் போது உறுதியளித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து 1990ஆம் ஆண்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகளால் இடம்பெயர்ந்த இப்பிரதேச மக்கள் தமது சொந்த நிலங்களை இழந்திருந்தனர். அவற்றை பார்வையிடுவதற்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

குறிப்பாக கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள வளலாய் கிராம சேவகர் பிரிவிலுள்ள 232ஏக்கர் நிலப்பரப்பு பொதுமக்களின் பார்வைக்காக விடுவிக்கப்பட்டதுடன் வலி. வடக்கில் அச்சுவேலி வயாவிளான் பகுதியும் மக்களின் பார்வைக்காக அனுமதிக்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த நிலப்பரப்பினை பூர்வீகமாகக் கொண்ட மக்களிடத்தில் அவர்களின் நிலங்களை நாளையதினம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரனின் தகவல்படி, வடமாகாணத்தில் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் 1100 ஏக்கர் காணிகளை விடுவிப்பதாக அரசாங்கம் உறுதியளித்துள்ளது. எனினும் இதுவரை 65 நாட்களுக்குள் 233 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related

என்ன விலை கொடுத்தாவது தமிழ் – முஸ்லிம் ஒன்றுமை வளர்க்கப் படல் வேண்டும்

என்ன விலை கொடுத்தாவது தமிழ் – முஸ்லிம் ஒன்றுமை வளர்க்கப் பாடல் வேண்டும் ,தமிழர்களும்  , முஸ்லிம்களும்  பிரிந்து வாழ்வது ஆபத்தானது என சுகாதார இராஜாங்க அமைச்சரும்  ஸ்ரீ லங்கா முஸ்லிம்...

மைத்திரி பிரதமராக போட்டியிட்டால் ரணிலுக்கு பாரிய சவால்: ரோசி சேனாநாயக்க

ஜனாதிபதி மைத்திரிபால எதிர்காலத்தில் பிரதம பதவிக்காக போட்டியிட்டால், தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு பாரிய சவாலாகி விடும் என சிறுவர் விவகார இராஜங்க அமைச்சர் ரோசி சேனாநாயக்க தெரிவித்துள்ளா...

மஹிந்தவுக்கு ஆதரவான கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு ஆதரவாக கண்டியில் நடைபெற்ற  கூட்டத்தில் பங்கேற்ற ஸ்ரீலங்கா சுதந்திர்க கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் சுகாதார அமைச்சர் ராஜித ...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item