பான் கீ மூனுக்கு அளித்த வாக்குறுதியை காப்பாற்றும் மைத்திரி

ஐ.நா பொதுச்செயலாளர் பான் கீ மூனுக்கு அளித்திருந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் நாடாளுமன்றத்தை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலைத்துள்...

ஐ.நா பொதுச்செயலாளர் பான் கீ மூனுக்கு அளித்திருந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் நாடாளுமன்றத்தை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 15ம் திகதி ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ளது. இதன்போது இலங்கையில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பான ஐ.நா விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.

கூட்டத்தொடருக்கு முன்னதாக இலங்கையில் பொறுப்பு வாய்ந்த புதிய அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என்று சர்வதேச சமூகம் எதிர்பார்த்துள்ளது.

அண்மையில் ஜனாதிபதியை தொலைபேசியில் தொடர்பு கொண்டிருந்த ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் இதுகுறித்து வலியுறுத்தியிருந்தார்.

எதிர்வரும் செப்ரெம்பரில், ஜெனிவாவில் கூட்டம் ஆரம்பமாகும் போது, இலங்கையில் புதிய அரசாங்கம் பதவியில் இருக்கும் என இலங்கை ஜனாதிபதி உறுதியளித்துள்ளார். புதிய அரசின் பிரதிநிதிகளுடன் தாமும் ஜெனிவா கூட்டத்தொடரில் பங்கேற்பேன் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்தநிலையிலேயே, செப்ரெம்பர் முதலாம் திகதி புதிய நாடாளுமன்றத்தைக் கூட்டும் வகையில், ஓகஸ்ட் 17ஆம் திகதி தேர்தலை நடத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

Related

தலைப்பு செய்தி 796473076217301178

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item