அரச மற்றும் காவற்துறை இடமாற்றங்களுக்கு தடை
எதிர்வரும் ஜூ மாதம் 6 ஆம் திகதியில் இருந்து தேர்தல் முடியும் வரை அரச சேவை மற்றும் காவற்துறை சேவையில் சகல இடமாற்றங்களும் தடை செய்யப்பட்டுள்...


ராஜகிரியவில் உள்ள தேர்தல் செயலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
அதேவேளை வாக்கு எண்ணும் மையங்களாக இம்முறை பாடசாலைகளை பயன்படுத்துவதில்லை என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த காலப்பகுதியில் உயர்தரப் பரீட்சைகள் நடைபெறும் என்பதால், பரீட்சைக்கு தோற்றும் பரீட்சாத்திகளுக்கு ஏற்படும் இடையூறுகளை தவிர்க்க இதன் மூலம் எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்போரிடம் இருந்து எதிர்வரும் 6 ஆம் திகதி முதல் விண்ணப்பங்கள் கோரப்படும் எனவும் தேர்தல் ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.