தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை: முஸ்லிம் காங்கிரஸ்
எதிர்வரும் பொதுத் தேர்தலில் தனித்தா அல்லது வேறு கட்சிகளுடன் இணைந்து கூட்டணி அமைத்தா போட்டியிடுவது என்பது குறித்து இதுவரை முவுகள் எதனையும் ...


எனினும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிட கூடிய ஆர்வமாக இருப்பதாக அந்த கட்சியின் பொருளாளர் அஸ்லம் மொஹமட் சலீம் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அதியுயர் பீடம் கூடி இறுதி முடிவை எடுக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கடந்த காலங்களில் பெரும்பாலும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்தே பொதுத் தேர்தல்களில் போட்டியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.