உக்ரைனிடம் இருந்து ரஷ்யாவை பாதுகாக்க ரஷ்யா ஒரு அணு ஆயுத போருக்கு தயாராக இருந்தது- புதின்
உக்ரைனிடம் இருந்து கிரிமியாவை பாதுகாக்கா கடந்த வருடம் ரஷ்யா ஒரு அணுஆயுத போருக்கு தயாராக இருந்தது என ரஷ்யா அதிபர் விளாடிமர் புதின் தெரி...

http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_883.html

உக்ரைனிடம் இருந்து கிரிமியாவை பாதுகாக்கா கடந்த வருடம் ரஷ்யா ஒரு அணுஆயுத போருக்கு தயாராக இருந்தது என ரஷ்யா அதிபர் விளாடிமர் புதின் தெரிவித்து உள்ளார்.
உக்ரைனின் தன்னாட்சி பகுதியாக இருந்து வந்த கிரிமியா பொது வாக்கெடுப்பு நடத்தி, ரஷியாவுடன் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 19 ந்தேதி இணைந்து கொண்டது. இது அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு ரஷியா மீது கோபத்தை ஏற்படுத்தியது.து.கிரிமியா போன்று கிழக்கு உக்ரைனும் சேரவிரும்புகிறது, ஆனால் இதற்கு உக்ரைன் எதிர்ப்பு தெரிவிக்கிறது. இதனால் கிழக்கு பகுதியில் உள்ள ரஷ்ய ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்கள் உக்ரைன் அரசு படைகளுடன் போரில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மோதலில் டுநெக்ஸ்ட் மற்றும் லுகான்ஸ்க் மாகாணங்களில் 2500க்கு மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர்.
கிரிமியாவை தன்னுடன் இணைத்துக்கொண்ட ரஷியாவின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் ரஷியா மீது பொருளாதார தடைகள் விதித்து உள்ளன. தற்போது இரு இருதரப்பிலும் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டு உள்ளது.
இந்த நிலையில் ரஷ்யாவை சேர்ந்த டெலிவிஷன் நிறுவனம் ஒன்று "தேசத்திற்கு கட்டுபட்டு" என்ற் ஆவணப்படம் ஒன்றை தயாரித்து உள்ளது. அதில் புதின் கிரிமியாவை பாதுகாக்க ரஷ்யாவின் அணு ஆயுத படைகளை தயார் நிலையில் வைத்து இருந்ததாக அதில் வெளிபடுத்தி உள்ளது.மேற்கத்திய நாடுகளின் தலையீட்டை தடுக்க ஒரு மோசமான திருப்பத்தை ஏற்படுத்தவும் தயாராக இருந்ததாக் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.மேலும் அதில் புதின் கூறும் போது ஆர்ப்பாட்டங்களால் ஏற்பட்ட வன்முறையில் ரஷ்யா உக்ரைனின் முன்னாள் அதிபர் விக்டர் யானு கோவிச்சின் உயிரை கைப்பாற்றியது என கூறபட்டு உள்ளது.
கிரிமியா நமது வரலாற்று பிரதேசம் .நாங்கள் அதை செய்ய தயாராக இருந்தோம். ரஷ்ய மக்கள் அங்கு வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்கு ஆபத்து ஏற்படும் அர்களை கைவிட முடியாது என அதில் புதின் கூறி உள்ளார்.
கிரிமியா நமது வரலாற்று பிரதேசம் .நாங்கள் அதை செய்ய தயாராக இருந்தோம். ரஷ்ய மக்கள் அங்கு வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்கு ஆபத்து ஏற்படும் அர்களை கைவிட முடியாது என அதில் புதின் கூறி உள்ளார்.