சிறிலங்காவில் இராணுவ புரட்சி ஏற்பட வாய்புள்ளதாக எச்சரிக்கை!
சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராக சதிப்புரட்சி ஒன்றில் ஈடுபடுவதற்கு தேவையான அனைத்து பலமும் அவன்கார்டே நிறுவனத்திடம் உள்ளதாக ஜே.வி.பின் த...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_365.html

சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராக சதிப்புரட்சி ஒன்றில் ஈடுபடுவதற்கு தேவையான அனைத்து பலமும் அவன்கார்டே நிறுவனத்திடம் உள்ளதாக ஜே.வி.பின் தலைவர் அனுரகுமார திசநாயக்க எச்சரித்துள்ளார்.
குறித்த நிறுவனத்திற்கு எதிரான விசாரணைகளில் தலையிடுவதற்கும், உண்மைகளை மூடி மறைப்பதற்கும் அமைச்சர்கள் உட்பட அரசாங்கத்தை சேர்ந்த பலர் முயல்வதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
அவன்ட்கார்டே நிறுவனம் குறித்த விபரங்கள் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்திலும், காலி கடலிலும் ஆயுதங்கள் கண்டு பிடிக்கப்பட்ட பின்னரே தெரியவந்தது.
குறிப்பிட் நிறுவனத்தினத்திடம் பணபலமும், ஆயுதங்களும், ஓய்வுபெற்ற திறமையான இராணுவ அதிகாரிகளும் உள்ளனர். இதன் மூலமாக அவர்கள் தங்களுடைய நடவடிக்கைகளுக்காக சிலரை வளைத்துப் போட்டுள்ளனர். அரசியல்வாதிகள் மாத்திரமல்ல சில அதிகாரிகளும் இதில் தொடர்புபட்டுள்ளனர்.
இதனால் மோசடி மற்றும் ஊழலில் ஈடுபட்டவர்களை தண்டிப்பதில் அரசாங்கம் எவ்வளவு தூரம் வெளிப்படை தன்மையுடனும், நேர்மையுடனும் செயற்படுகின்றது என்பதற்கு இந்த நிறுவனத்தின் மீதான நடவடிக்கைகள் அமில பரீட்சையாக அமையப் போகின்றன.
குறிப்பிட்ட நிறுவனம் சரியான நடவடிக்கைகளில் ஈடுபட்டதா அல்லது சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதா என்பது குறித்து தீர்மானிக்கும் பொறுப்பை நான் எடுக்க முடியாது.
எனினும் சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராக சதிப்புரட்சி ஒன்றில் ஈடுபடுவதற்கு தேவையான அனைத்து பலமும் அந்த நிறுவனத்திடம் உள்ளது.
தனியார் நிறுவனமொன்று இவ்வளவு அதிகாரங்களை வைத்திருப்பதற்கு அனுமதிக்க முடியுமா என்பதை தீர்மானிக்க வேண்டியது நீதித்துறையின் கடமை என அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின் போது இந்த தகவல்களை அவர் வெளியிட்டுள்ளார்.
அவன்ட்கார்டே நிறுவனம் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு மிக நெருக்கமானவர்களால் முன்னெடுத்து வரும் தனியார் நிறுவனமாகும்.


Sri Lanka Rupee Exchange Rate