இந்திய பிரதமர் மோடிக்கு சவால் விடும் ரவி கருணாநாயக்க!
தமிழர்களுக்கான இனப்பிரச்சினையை தீர்க்க, 13ம் திருத்தச் சட்டத்திற்கு அப்பாலான தீர்வுத் திட்டத்தை வழங்க முடியாதென நிதியமைச்சர் ரவி கருணாநாயக...

http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_855.html
தமிழர்களுக்கான இனப்பிரச்சினையை தீர்க்க, 13ம் திருத்தச் சட்டத்திற்கு அப்பாலான தீர்வுத் திட்டத்தை வழங்க முடியாதென நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
13ம் திருத்தச் சட்டத்திற்கு அப்பாலான தீர்வுத் திட்டமொன்றை வழங்குவதற்கான அதிகாரப் பகிர்வு தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்கும் எவ்வித திட்டங்களும் கிடையாது.
13ம் திருத்தச் சட்டத்திற்கு அப்பாலான தீர்வுத் திட்டமொன்று வழங்கப்பட வேண்டுமென இந்திய பிரதமர் வெளியிட்ட கருத்து தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோருவதனைப் போன்று மாகாணசபைகளுக்கு காவல்துறை மற்றும் காணி அதிகாரங்களோ அல்லது மேலதிக அதிகாரங்களோ வழங்கப்பட மாட்டாது.
பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களோ அல்லது மேலதிக அதிகாரங்களோ வழங்கப்பட மாட்டாதென ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின் போது இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வாரம் சிறிலங்கா சென்றிருந்த இந்திய பிரதமர், 13ம் திருத்தச் சட்டம் முழுமையாக துரித கதியில் அமுல்படுத்தப்பட வேண்டும் என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறிலங்காவில் எந்தத் தரப்பினர் ஆட்சிப் பீடம் ஏறினாலும், தமிழர்கள் விடயத்தில் ஒரே மாதிரியான நிலைப்பாட்டை கொண்டிருக்கின்றனர்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் வழங்கிய வாக்குகளின் மூலம் மட்டுமே தற்போதை அரசாங்கம் ஆட்சிப்பீடம் ஏறியமை சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயமாகும்.