மஹிந்தவோடு நேருக்கு நேர் மோதும் பீல்ட் மார்ஷல்?
மஹிந்த ராஜபக்ச குருநாகலில் போட்டியிட விண்ணப்பித்திருக்கும் நிலையில் கொழும்பில் போட்டியிடுவதற்குத் தயாராகியிருந்த பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக...


மஹிந்த ராஜபக்ச குருநாகலில் போட்டியிட விண்ணப்பித்திருக்கும் நிலையில் கொழும்பில் போட்டியிடுவதற்குத் தயாராகியிருந்த பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக மஹிந்தவை எதிர்த்து குருநாகலிலேயே போட்டியிட விரும்பி தனது வேட்பு மனுவை மீளப்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உத்தியோகபூர்வமாக ஜனநாயகக் கட்சி சார்பில் இவ்வறிவித்தல் வெளியாகவில்லை என்பது சுட்டிக்காட்டப்படத்தக்க அதேவேளை மஹிந்தவை நேருக்கு நேர் எதிர்கொள்வதை சரத் பொன்சேகா விரும்புவதாக கட்சி வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. மஹிந்த ஆட்சியின் போது அதிகாரங்கள் மற்றும் சிவில் உரிமைகளும் பறிக்கப்பட்ட நிலையில் சரத் பொன்சேகா சிறையிலடைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.