மகிந்தவின் பரபரப்பான தேர்தல் பிரச்சாரம் 14ம் திகதி ஆரம்பம்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் குருநாகல் மாவட்டத்தில் களமிறங்கவுள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது முதலாவது பரப்புரை நடவ...


ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின்
சார்பில் குருநாகல் மாவட்டத்தில் களமிறங்கவுள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த
ராஜபக்ச தனது முதலாவது பரப்புரை நடவடிக்கையை எதிர்வரும் 14 ஆம் திகதி
ஆரம்பிக்கவுள்ளார்.
மகிந்தவின் விசுவாசிகளுள் ஒருவரான முன்னாள் அமைச்சரால் இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எதிர்வரும் 13ஆம் திகதி வேட்புமனுத்
தாக்கல் செய்த பின்னர் மறுநாள் காலை மகிந்த ராஜபக்ச குருநாகலுக்குச் சென்று
மத வழிபாடுகளிலும் ஈடுபட்ட பின்னர்,மக்களை சந்திப்பார் என அறிய
முடிகின்றது. மேலும் குருநாகலில் தனக்கு விசுவாசமான உறுப்பினர்களின்
மேடைகளிலும் மகிந்த ஏறுவார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.