''பாராளுமன்ற தேர்தல் - 2015'' றிசாத், பைஸர், ஆசாத் இணைந்து போட்டியிட தீர்மானம்..?
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் றிசாத் பதியுதீன், பைஸர் முஸ்தபா, ஆசாத் சாலி ஆகிய மூவரும் இணைந்து போட்டியிட தீர்மானித்துள்ளதாக ...
http://kandyskynews.blogspot.com/2015/01/2015_28.html
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் றிசாத் பதியுதீன், பைஸர் முஸ்தபா, ஆசாத் சாலி ஆகிய மூவரும் இணைந்து போட்டியிட தீர்மானித்துள்ளதாக ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு நம்பகரமான அரசியல் வட்டாரங்களிலிருந்து அறியவருகிறது.
சற்றுமுன்னர் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு கிடைத்த தகவல்களின்படி,
இந்த மூவரும் இதுதொடர்பில் முதற்கட்ட உடன்பாட்டுக்கு வந்துள்ளனர். எனினும் இதுவரை இறுதித் தீர்மானம் மேற்கொள்ளவில்லை.
சுதந்திரக் கட்சியில் போட்டியிடுவதா அல்லது ஐக்கிய தேசியக் கட்சியில் கூட்டுச்சேர்ந்து போட்டியிடுவதா, இல்லையேல் தனித்துப் போட்டியிடுவதா என்பது தொடர்பிலும் றிசாத் பதியுதீன் பைஸர் முஸ்தபா, ஆசாத் சாலி ஆகிய மூவரும் தொடர்ந்து ஆராயந்து வருகின்றனர்.
முஸ்லிம் காங்கிரஸுடன் இதுதொடர்பில் பேச்சுவார்த்தை நடாத்தவும் அவர்கள் தயாராகவிருப்பதாகவும் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு அறியக்கிடைத்தது.



Sri Lanka Rupee Exchange Rate