கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவிக்கு முஸ்லிம் காங்கிரஸ் புதுமுகம்?

கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் பதவி ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு வழங்கப்படும் என்பது ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி அறிவித்துள்ள நிலையில்  மு...

கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் பதவி ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு வழங்கப்படும் என்பது ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி அறிவித்துள்ள நிலையில்  முஸ்லிம் கங்கிரஸ் கிழக்கு மாகாண சபை அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களுள்  அமைச்சர்கள் மன்சூர் மற்றும் ஹாபீஸ் ஆகியோர் “புரன்ட் ரன்னர்ஸ்” ஆக இருந்தனர் .


இந்த நிலையில் கிழக்கு மாகாண சபை முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் தவம்(அல் தவாம்) இந்த “புரன்ட் ரன்னர்ஸ் பன்ச்”இல் இணைந்துகொண்டுள்ளதாக அக்கட்சி உயர்மட்ட உறுப்பினர்கள் மூலம் மடவளை நியுசுக்கு அறியக்கிடைத்தது.

தேசிய காங்கிரசின் கோட்டை எனக்கருதப்படும் அக்கரைப்பற்று பிரதேசத்தில் தனது கால் தடத்தை மிக வலிமையாக பதித்து கொள்ள பிரதேசத்தை சேர்ந்த தவத்தை முதலமைச்சராக்கும் நகர்வை முஸ்லிம் காங்கிரஸ் தலைமை  மேற்கொள்வது தொடர்பாக தீவிரமாக அராய்ந்துவருவதாக  தெரிவிக்கபடுகிறது.

அக்கரைப்பற்று பிரதேசத்தை சேர்ந்த  தவம் என்றழைக்கப்படும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அல் தவாம் தலைமைதுவத்துக்கு மிக மிக விசுவாசமானவர் என்பதையும் நாம் கருத்தில் எடுக்க வேண்டியுள்ளது.

Related

இலங்கை 5068042328393303720

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item