ஊழலில் ஈடுபடாதவர்களுக்கு வேட்புமனுக்களை வழங்குமாறு ஆசிரியர் ஒன்றியம் வேண்டுகோள்
ஊழல்களில் ஈடுபடாதவர்களுக்கு எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை வழங்குமாறு அரசியல் கட்சிகளிடம் ஆசிரியர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத...


ஊழல்களில் ஈடுபடாதவர்களுக்கு எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை வழங்குமாறு அரசியல் கட்சிகளிடம் ஆசிரியர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்த வேண்டுகோள் அடங்கிய கடிதம் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதிபர் மற்றும் ஆசிரியர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் ஈ.எம்.ஜே.எஸ்.டி.சேரம் தெரிவித்துள்ளார்.
எதிர்கால ஆட்சியை கையேற்கும் நபர்கள் நாட்டின் கல்வி தொடர்பில் சிறந்த யோசனைகளை, தேர்தலுக்கு முன்னர் அறிவிக்க வேண்டும் எனவும், 15 தொழிங்சங்கங்கள் ஒன்றிணைந்து உருவாக்கப்பட்டுள்ள குறித்த ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.