வெலே சுதாவை விடுதலை செய்ய வாய்ப்பு!

சமந்தகுமார என்ற வெலே சுதாவிற்கு எதிராக விசாரணைகளை முன்னெடுப்பது தொடர்பில் தீர்மானம் எடுக்க கால அவகாசம் வழங்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றில்...

வெலே சுதாவை விடுதலை செய்ய வாய்ப்பு!
சமந்தகுமார என்ற வெலே சுதாவிற்கு எதிராக விசாரணைகளை முன்னெடுப்பது தொடர்பில் தீர்மானம் எடுக்க கால அவகாசம் வழங்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றில் சட்டமா அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார்.

போதைப் பொருள் வர்த்தகம் தொடர்பில் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது சட்டமா அதிபர் சார்பில் அரச சட்டத்தரணி இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

வழக்குடன் தொடர்புடைய பொலிஸ் விசாரணை அறிக்கை காணாமல் தொலைந்து போயுள்ளதால் வழக்கு விசாரணையை முன்னெடுத்துச் செல்ல முடியாது என ஏற்கனவே நீதிமன்றில் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதனால் சந்தேகநபரான வெலே சுதாவை விடுதலை செய்யுமாறு சட்டத்தரணி நீதிமன்றில் கோரியுள்ளார்.

எனினும் இந்த கோரிக்கை தொடர்பில் ஆய்வு செய்ய கால அவகாசம் தேவை என அரச சட்டத்தரணி கூறியுள்ளார்.

இக்கருத்துகளை பரிசீலித்த நீதிமன்றம் வழக்கினை எதிர்வரும் 16ம் திகதிக்கு ஒத்திவைத்ததுடன் அன்றைய தினம் சட்டமா அதிபர் தனது நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

Related

இலங்கை 7877258055950686058

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item