மைத்திரியை கொலை செய்யப் போவதாக மிரட்டும் மஹிந்த! அதிர்ச்சித் தகவல்
சிறிலங்காவில் சர்வதிகார ஆட்சியை நடத்திய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அடாவடித்தனங்கள் இன்னும் குறையவில்லை என தெரிவிக்கப்படுகிறது. மஹ...


சிறிலங்காவில் சர்வதிகார ஆட்சியை நடத்திய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அடாவடித்தனங்கள் இன்னும் குறையவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
மஹிந்தவும் அவர் சார்ந்த குழுவினரது நடவடிக்கையால் கொழும்பு அரசியல் களம் நிலை குலைந்துள்ளது.
நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் போட்டியிட மஹிந்தவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளமை அடுத்து, பல்வேறு நெருக்கடியான நிலைகள் ஏற்பட்டுள்ளன.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் வரை மஹிந்தவுக்கு வேட்புமனு வழங்கப் போவதில்லை என்ற உறுதியான நிலைப்பாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இருந்தார். எனினும் திடீரென தனது முடிவை மாற்றி மஹிந்த போட்டியிட வாய்ப்பு வழங்குவதாக அறிவித்துள்ளார்.
மைத்திரியின் திடீர் மாற்றம் தொடர்பில் பல்வேறு தரப்பினருக்கு அதிர்சியை ஏற்படுத்தியிருந்தது.
மைத்திரியின் இந்த முடிவுக்கு இரண்டு பிரதான காரணங்கள் இருப்பதாக கொழும்பை தளமாக கொண்ட புலனாய்வு தகவல்களின் அடிப்படையில் அரசியல் ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
மைத்திரிக்கு மஹிந்த கொடுத்த உயிர் அச்சுறுத்தல் மற்றையது சிறுபான்மையினரை ஒடுக்க நினைக்கும் இனவாத சிங்கள துறவிகளின் கடும் அழுத்தமே காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் மைத்திரி - மஹிந்த ஆகியோருக்கிடையில் இரகசிய சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. இதன் போது தனக்கு வேட்புமனு தர விட்டால் கடும் விளைவுகள் ஏற்படும் என மஹிந்த மிரட்டியுள்ளார். இந்த எச்சரிக்கையை அடுத்தது உயிருக்கு பயந்தே மைத்திரி வேட்புமனு வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் மஹிந்தவுக்கான அனுமதி வழங்கியதை அடுத்து மைத்திரி கடும் அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிய வருகிறது.