“பொம்மையின் தலையை குறிவைத்து வெட்டு”: ஐ.எஸ் தீவிரவாதிகளின் பயிற்சி குறித்து விவரிக்கும் சிறுவன் (வீடியோ இணைப்பு)
ஐ.எஸ் தீவிரவாதிகளிடமிருந்து தப்பிய யாஸிடி சிறுவன் ஒருவன், தனக்கு வழங்கப்பட்ட பயிற்சி குறித்து செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளான்...


ஐ.எஸ் தீவிரவாதிகளிடமிருந்து தப்பிய யாஸிடி சிறுவன் ஒருவன், தனக்கு வழங்கப்பட்ட பயிற்சி குறித்து செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளான்.
ஈராக் மற்றும் சிரியாவில் தாக்குதல் நடத்தி வரும் ஐ.எஸ் தீவிரவாதிகள், அங்கிருக்கும் யாஸிடி பழங்குடியினர்களின் குழந்தைகளை கடத்தி, அவர்களுக்கு போர் பயிற்சி அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஐ.எஸ் தீவிரவாத பயிற்சி குழுவில் இடம்பெற்றிருந்த யாஹியா(14) என்ற சிறுவன் அங்கிருந்து தப்பித்து தனது குடும்பத்தாரோடு இணைந்துள்ளான்.
இச்சிறுவன் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், தீவிரவாதிகள் எனக்கு போர் வாளை ஏந்த பயிற்சி அளித்தனர், மேலும் உனக்கு எதிரே இருப்பவர்கள் தகாதவர்கள் என்று நினைக்குமாறு அறிவுறுத்துவர்.
பொம்மைகளின் தலையை குறிவைத்து வெட்டும்படி கூறுவார்கள், சரியாக வெட்டவில்லை என்றால் இரண்டு அல்லது மூன்று முறை வாய்ப்பு தருவார்கள் என்று கூறியுள்ளான்.
மேலும், ஈராக் பகுதியில் தங்களது கட்டுப்பாட்டில் இல்லாத பகுதிகளில் வசிக்கும் பழங்குடியின குழந்தைகளுக்கு பொம்மைகளை பரிசாக கொடுத்து அவர்களை மூளை சலவை செய்து வருகின்றனர்.