அமெரிக்காவை இஸ்ரேல் வேவுபார்க்க வில்லை: நெதன்யாஹு
அமெரிக்கா தலைமையில் உலக வல்லரசுகளுக்கும் இரானுக்கும் இடையில் நடந்துவருகின்ற அணுசக்தி பேச்சுவார்த்தைகளில் இஸ்ரேல் வேவுபார்த்தது என்று வெளியா...

![]() |
ஒபாமா நெதன்யாஹு இடையிலான உறவில் விரிசல்கள் தென்பட ஆரம்பித்துள்ளன. |
சென்ற ஆண்டு இரானுடன் தனிப்பட்ட ரீதியாக அமெரிக்கா பேச ஆரம்பித்ததிலிருந்தே, இஸ்ரேல் அவற்றில் வேவுபார்த்து வருகிறது என்பதை வெள்ளை மாளிகை கண்டறிந்துள்ளதாக அப்பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது.
இஸ்ரேல் வேவுபார்த்தது என்பதைவிட அதுபற்றிய ரகசிய தகவல்கள் அமெரிக்க அரசியல்வாதிகள் சிலருடன் பகிர்ந்துகொள்ளப்பட்டுள்ளது என்பதுதான் அதிக வருத்தம் தருவதாக ஒபாமா நிர்வாகம் கருதுகிறது என அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள்காட்டி கூறப்படுகிறது.