கணவனை பார்க்க வந்து நீதிமன்றை சுற்றி ஓடிய வெலே சுதா மனைவி.

போதைத் பொருள் விற்பனையில் பெற்ற பணத்தை சட்டவிரோத முதலீடு செய்ததாக சமந்த குமார என்ற வெலே சுதா மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை விசாரணை ...

Untitled
போதைத் பொருள் விற்பனையில் பெற்ற பணத்தை சட்டவிரோத முதலீடு செய்ததாக சமந்த குமார என்ற வெலே சுதா மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை விசாரணை செய்ய போதியளவு சாட்சியங்கள் இல்லை என பிரதிவாதி தரப்பு சட்டத்தரணிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தேவிகா தென்னகோன் முன்னிலையில் இந்த வழக்கு இன்று (23) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
வெலே சுதாவுக்கு எதிரான 57 குற்றச்சாட்டுக்கள் ஓரே குற்றப்பத்திரிகையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வெலே சுதா சார்பில் நீதிமன்றில் ஆஜரான சட்டத்தரணிகள் குறிப்பிட்டனர்.
அனைத்துக் குற்றச்சாட்டுக்களையும் ஒரு குற்றப்பத்திரிகையில் உள்ளடக்குவது சட்டவிரோத செயல் என்றும் அவை வெவ்வேறாக இருக்க வேண்டும் என்றும் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
எனினும் ஒரே சம்பவத்தில் இந்த 57 குற்றச்சாட்டுக்களும் இருப்பதால் ஒரு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதாக அரச தரப்பு சட்டத்தரணிகள் குறிப்பிட்டனர். எனவே அது சட்டவிரோத செயல் அல்ல என்றும் அவர்கள் வாதிட்டனர்.
இரு தரப்பு கருத்துக்களையும் பரிசீலித்த நீதிபதி, எதிர்வரும் மே மாதம் 5ம் திகதிவரை வழக்கை ஒத்திவைத்ததுடன் வெலே சுதாவை தொடர்ந்தும் பொலிஸ் காவலில் வைக்கவும் அவரது மனைவி மற்றும் உறவு சகோதரியை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டார்.
அதேவேளை நீதிமன்றுக்கு வந்திருந்த வெலே சுதாவின் மனைவி காணி பிரியந்தி (இவர் பிணையில் விடப்பட்டுள்ளவர்) ஊடகவியலாளர்களின் புகைப்படங்களில் இருந்து தப்ப நீதிமன்ற வளவில் ஒளிந்து திரிந்தது காணக்கூடியதாக இருந்தது.
பட உதவி: லங்காதீப
RDS_9796 - Copy - Copy
RDS_9843
RDS_9876
RDS_9808
RDS_9849
RDS_9828
RDS_9805

Related

இலங்கை 8120338707598564036

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item