குழந்தைகளுடன் சிரியாவிற்கு சென்ற பெண்: கவலையில் கணவர்
பிரித்தானியாவை சேர்ந்த பெண் ஒருவர் தன் குழந்தைகளுடன் சிரியா சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவை சேர்ந்த ரியானா...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_651.html
 |
|
|
| பிரித்தானியாவை சேர்ந்த பெண் ஒருவர் தன் குழந்தைகளுடன் சிரியா சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவை சேர்ந்த ரியானா பேகம் இஸ்லாம்(Rehana Begum Age-33) என்ற இஸ்லாமிய பெண், தன் மகன்(8) மற்றும் மகளுடன்(3) கடந்த மாதம் 14ம் திகதி நாட்டை விட்டு சென்றுள்ளார்.
பிரித்தானியாவின் ஹித்ரோ(Heathrow) விமான நிலையத்திலிருந்து துருக்கியின் இஸ்தான்புல்(Istanbul) நோக்கி இவர் பயணித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அப்பெண் தனது கணவருக்கு தெரியாமலேயே வீட்டை விட்டு சென்றுள்ளார் என்றும் இவருக்கு சிரியா நாட்டவர் ஒருவர் உதவி செய்துள்ளார் எனவும் தற்போது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து இவரின் கணவர் கூறுகையில், குழந்தைகளுடன் ஏன் அவர் அங்கு சென்றார் என்பது எனக்கு தெரியவில்லை என்றும் இதனால் நான் மனவுளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன் எனவும் வருத்ததுடன் தெரிவித்துள்ளார்.
|
|