பிரிட்டனில் இஸ்லாமிய தீவிரவாதத்தை தடுக்கத் திட்டங்கள்
உள்துறை அமைச்சர் தெரேஸா மே இஸ்லாமிய தீவிரவாதத்தை எதிர்கொள்வதற்கான பரிந்துரைகளை முன்வைத்துள்ள பிரிட்டனின் உள்துறை அமைச்சர் தெரேஸா மே, சமத...


இஸ்லாமிய தீவிரவாதத்தை எதிர்கொள்வதற்கான பரிந்துரைகளை முன்வைத்துள்ள பிரிட்டனின் உள்துறை அமைச்சர் தெரேஸா மே, சமத்துவம் மற்றும் சகிப்புத்தன்மை ஆகிய பிரிட்டனின் விழுமியங்களுக்கு எதிரான நபர்களையும் குழுக்களையும் தடைசெய்யும் உத்தரவுகள் கொண்டுவரப்படும் என்று கூறியுள்ளார்.
ஷரியா நீதிமன்றங்களின் பணி தொடர்பில் மீளாய்வு செய்யப்படும் என்று கூறியுள்ள அமைச்சர், இணையதளத்தில் தீவிரவாதத்தை ஊக்குவிப்பதற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
பிரிட்டனில் 7 ஆண்டுகளுக்கு முன்பிருந்து, வெறுப்புணர்வுக் குற்றங்கள் வளர்ந்துவருவதாகக் கூறியுள்ள உள்துறை அமைச்சர், தீவிரவாதமும் பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டது என்பதால் அதனை எதிர்கொள்ள வேண்டியதும் அவசியம் என்றும் கூறியுள்ளார்.