பலூன் பிரசாரம்:வடக்கு- தெற்கு கொரியா இடையே உரசல்
வடகொரியத் தலைவரை நையாண்டி செய்து எடுக்கப்பட்ட ஹாலிவுட் படம் ஒன்றின் டிவிடிக்களை அந்நாட்டினுள் ஆகாயம் மூலம் வீச திட்டமிடப்பட்டிருந்த நடவடிக்க...


அவ்வகையில் எல்லையைக் கடந்து ஆயிரக் கணக்கான டிவிடிக்களை வீச தென்கொரியச் செயற்பாட்டாளர்கள் திட்டமிட்டிருந்தனர். அப்படி அவர்கள் செய்தால் இராணுவ பதிலடியைச் சந்திக்க வேண்டும் என்று வடகொரியா எச்சரித்திருந்தது.
இராட்சத பலூன்கள் மூலம் 'தி இண்டர்வியூ' என்ற திரைப்படத்தின் டிவிடிக்கள் வடகொரியாவுக்குள் வீசப்படவிருந்தன.
வடகொரியத் தலைவர் கிம் ஜாங் உன்னை கொலை செய்யத் தீட்டப்படும் ஒரு திட்டத்தைக் கருவாக வைத்து அப்படம் எடுக்கப்பட்டிருந்தது.
அந்தத் திரைப்படம் வலிந்த ஒரு தீவிரவாத நடவடிக்கை என்று கூறியுள்ள வடகொரியா, தனது எல்லைப் பகுதியில் இராணுவத்தின் மூலம் அந்த பலூன்கள் சுட்டு வீழ்த்தப்படும் என்று எச்சரித்துள்ளது.
தென் கொரியாவின் 'தி சியோனன்' எனும் கப்பலை ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் வடகொரியா மூழ்கடித்தது என்று குற்றஞ்சாட்டி, அந்த நிகழ்வை நினைவு கூறும் வகையிலேயே பலூன்கள் மூலம் வடகொரியத் தலைவரை நையாண்டி செய்யும் படத்தின் டிவிடிக்களை வீசும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது என்று தென் கொரியச் செயற்பாட்டாளர்கள் கூறுகிறார்கள்.