சவாலை சந்திக்க புதிய கூட்டணி.. கலந்துரையாடல் வெற்றி.
முன்னாள் ஜனாதிபதியினால் விடுக்கப்பட்டுள்ள சவாலை சந்திக்க பரந்த கூட்டமைப்புடன் எதிர்வரும் பொது தேர்தலில் முகம் கொடுப்பதற்காக ஐக்கிய தேசிய கட்...

முன்னாள் ஜனாதிபதியினால் விடுக்கப்பட்டுள்ள சவாலை சந்திக்க பரந்த கூட்டமைப்புடன் எதிர்வரும் பொது தேர்தலில் முகம் கொடுப்பதற்காக ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஜாதிக ஹெல உறுமய (தற்போது எக்ஸத் யஹபாலன ஜாதிக பெரமுன (ஐக்கிய நல்லாட்சிக்கான தேசிய முன்னணி) பிரதிநிதிகளுக்கிடையில் இடம்பெற்ற கலந்துரையாடல் வெற்றியடைந்துள்ளதாகவும், எதிர்பார்த்த பதில் எதிர்வரும் சில மணித்தியாலங்களில் வெளியாகவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இக்கலந்துரையாடல் வெற்றியடைந்தால் அர்ஜுன ரணதுங்க, ராஜித சேனாரத்ன மற்றும் எம்.கே.டி.எஸ்.குணவர்தன ஆகிய அமைச்சர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திரவும் அதற்கு ஆதரவு வழங்கவுள்ளனர்.
ரத்ன தேரர் – சம்பிக்கவின் நிலைப்பாடு?
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் குற்றம் சுமத்தப்பட்டுள்ள நபர்களுக்கு வேட்புமனு வழங்கியதனால் அக்கூட்டணியை விட்டு விலகிய அத்துரலிய ரத்ன தேரர் மற்றும் சம்பிக்க ரணவக்க ஆகியோர் தங்கள் புதிய கட்சியின் கீழ் தனியாக போட்டியிட தீர்மானித்திருந்தனர்.
அத்துரலிய ரத்ன தேரர் மற்றும் சம்பிக்க ரணவக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அதிகாரத்திற்கு கொண்டு வருவதற்கு பல்வேறு ஆதரவுகளை வழங்கியவர்கள்.
இதற்கிடையில், நேற்று ஜனநாயக கட்சியின் வேட்புமனுவை ஒப்படைத்த பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அதனை இராஜினாமா செய்துகொண்டு புதிய கூட்டணியில் இணைவதில் சட்ட ரீதியான பிரச்சினைகள் எதுவும் உள்ளதா என அக்கட்சி பிரதிநிதிகள் தேர்தல்கள் செயலகத்தில் விசாரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.