மாலைத்தீவின் 50 ஆவது சுதந்திர தின நிகழ்வில் கலந்துக் கொண்ட ஜனாதிபதி இன்று நாடு திரும்பியுள்ளார்
மாலைத்தீவின் 50 ஆவது சுதந்திர தின நிகழ்வில் கலந்துக் கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (27) நாடு திரும்பியுள்ளார். மாலைதீவின் சுதந்...


மாலைத்தீவின் 50 ஆவது சுதந்திர தின நிகழ்வில் கலந்துக் கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (27) நாடு திரும்பியுள்ளார்.
மாலைதீவின் சுதந்திர தின நிகழ்வுகள் அந்நாட்டின் தலைநகரில் நேற்றிரவு இடம்பெற்றன.
இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்றிருந்தார்.
ஜனாதிபதியின் மாலைத்தீவிற்கான விஜயத்தின் போது அந்நாட்டு உயரதிகாரிகளுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.