ஷரீஆ வங்கிகளை தடைசெய்ய வேண்டும் – மத்திய வங்கியின் பிரதி ஆளுநரிடம் BBS வேண்டுகோள்
நாட்டின் வங்கி முறையை ஷரிஆ சட்டம் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது. நாட்டில் இயங்கி வரும் ஷரிஆ வங்கிகள் பிரிவினை வாதத்தை ஊக்கப்படுத்த...
http://kandyskynews.blogspot.com/2015/06/bbs_24.html
நாட்டின் வங்கி முறையை ஷரிஆ சட்டம் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது. நாட்டில் இயங்கி வரும் ஷரிஆ வங்கிகள் பிரிவினை வாதத்தை ஊக்கப்படுத்துகின்றன. அதனால் ஷரீஆ சட்டம் அமுலில் இல்லாத இந்நாட்டில் ஷரீஆ வங்கிகள் இயங்கி வருவது சட்ட விரோதமானதாகும். இதை தடை செய்ய மத்திய வங்கி நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுபலசேனா நேற்று காலை மத்திய வங்கியின் பிரதி ஆளுநர் கலாநிதி டப்ளியூ வீரசிங்கவை சந்தித்து வேண்டுகோள் விடுத்தது.
மத்திய வங்கியின் ஆளுனர் அர்ஜுன மகேந்திரனை சந்தித்து ஷரீஆ வங்கி முறைமை பற்றி கலந்துரையாட பொதுபலசேனா ஏற்பாடுகளை செய்திருந்த போதும் மத்திய வங்கியின் பிரதி ஆளுனர் டப்ளியூ. வீரசிங்கவுடனே பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டியேற்பட்டது.
ஆளுனர் அர்ஜுன மகேந்திரன் பாராளுமன்றுக்கு அழைக்கப்பட்டிருந்த காரணத்தினால் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ள முடியவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. முஸ்லிம் அடிப்படைவாதிகள் இந்நாட்டின் உணவு முறையில் ஹலால் என்ற பெயரில் பிரிவினை வாதத்தை ஏற்படுத்தினார்கள். இந்தக்குழு நாட்டின் வங்கி முறைமைகளையும் ஆக்கிரமித்து கொண்டுள்ளது. கல்வி மற்றும் நிதித்துறையில் இஸ்லாமிய ஆக்கிரமிப்பு மிகவும் சூட்சுமமாக பாராளுமன்றத்தில் கலந்துரையாடப்படாது இடம்பெற்றுள்ளது. இதனை தடை செய்வதற்கு கடந்த அரசாங்கத்துக்கு அழுத்தங்களைப் பிரயோகித்தும் எதுவித பயனும் ஏற்படவில்லை என்று மத்திய வங்கியின் பிரதி ஆளுனரிடம் விளக்கப்பட்டது.
நேற்று காலை நடைபெற்ற மத்திய வங்கி பிரதி ஆளுனருடனான கலந்துரையாடலில் பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் அமைப்பின் தேசிய அமைப்பாளர் விதாரந்தெனிய நந்ததேரர், நிர்வாக பணிப்பாளர் கலாநிதி டிலந்த விதானகே உட்பட ஐவர் கலந்து கொண்டனர். நடைபெற்ற கலந்துரையாடல் தொடர்பாக பொதுபலசேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் ஊடகங்களுக்கு பின்வருமாறு கருத்து வெளியிட்டார். ஷரீஆ வங்கி முறைமை நாட்டின் சட்டத்துக்கு முரணாக அமைக்கப்பட்டுள்ளதெனவும் இதற்கு தடை விதிக்குமாறும் நாம் கடிதம் மூலம் மத்திய வங்கி ஆளுனரை கேட்டிருந்தோம். இது தொடர்பாக அவருடன் பல மின்னஞ்சல் மூலம் கருத்து பறிமாறிக்கொண்டுள்ளோம்.
இன்று ஒரு மணித்தியாலத்திற்கு கலந்து பேசினோம். இலங்கையின் ஷரிஆ வங்கிகளின் இலக்கு கோட்பாடுகள் தொடர்பான ஆவணங்களையும் மத்திய வங்கியின் பிரதி ஆளுனரிடம் காண்பித்தோம்.
ஷரீஆ வங்கி முறை வங்கித்துறையின் சந்தைப்படுத்தலின் ஓர் அங்கமாகவே ஆரம்பிக்கப்பட்டது. வங்கிகள் சந்தைப்படுத்தலின் போது பல்வேறு பிரிவுகளை ஆரம்பிக்கலாம். வட்டியில்லா வங்கி முறையாக இந்த ஷரீஆ வங்கி முறை ஆரம்பிக்கப்பட்டது என பிரதி ஆளுனர் விளக்கமளித்தார். எது எப்படியென்றாலும் ஷரிஆ வங்கி முறை பிரிவினை வாதத்தை உருவாக்கியுள்ளதாக தெளிவுபடுத்தினோம் என்றார்.
பொதுபலசேனா அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் டிலந்த விதானகே ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் முஸ்லிம்கள் இந்நாட்டில் பல்வேறு வகையில் பிரிவினை வாதத்தை உருவாக்கியிருக்கின்றார்கள். ஹலால் உணவு முறை பிரிவினையை உருவாக்கியது. இஸ்லாமிய வங்கி முறை இப்போது பிரிவினைவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு பிரிவினை வாதத்தை தூண்டும் இஸ்லாமிய வங்கி முறையை இந்நாட்டில் செயற்படுத்த முடியாது.
இலங்கையில் 2005 ஆம் ஆண்டு வங்கி சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட போது மிகவும் சூட்சுமமாக இஸ்லாமிய வங்கி முறை உட்புகுத்தப்பட்டுள்ளது. ஷரீஆ சட்டம் அமுலில் இல்லாத இந்நாட்டில் அச்சட்டத்தின் கீழ் வங்கி முறையொன்றினை உருவாக்க முடியாது.
ஷரீஆ வங்கி ஒரு சமய ரீதியான வங்கி முறை என்பதால் இது சட்ட விரோதமானதாகும். ஷரீஆ வங்கி முறை தொடர்பான ஆவணங்கள் இந்நாட்டின் வங்கி முறை தவறானது எனத் தெரிவிக்கின்றன. நடைமுறையிலுள்ள வங்கி முறை மனித சமுதாயத்துக்கு நன்மை பயப்பன அல்ல. வட்டியில்லாத வங்கி முறையே மனித சமுதாயத்துக்கு சிறந்தது என அவ் ஆவணங்கள் கூறுகின்றன. இதன் மூலம் பிரிவினை வாதம் பரப்பப்படுகிறது.
நாம் எந்த ஒரு மதத்துக்கும் இனத்துக்கும் எதிரானவர்களல்ல. ஆனால் பிரிவினைவாதத்தை பரப்பும் அடிப்படைவாதிகளுக்கு எதிரானவர்கள். நாட்டு மக்கள் அனைவரும் ஒரே சட்டத்தின் கீழ் ஒற்றுமையாக வாழ வேண்டுமென்றே நாம் விரும்புகின்றோம்.
கடந்த கால ஆட்சியாளரிடமும் ஷரீஆ வங்கி முறைபற்றி முறையிட்டோம். கடந்த ஆட்சியில் ஓரிருவரே தீர்மானங்களை மேற்கொள்பவர்களாக இருந்தார்கள். ஜெனீவா விவகாரத்தில் மத்திய கிழக்கு நாடுகள் இலங்கைக்கு ஆதரவு வழங்கின. இதைக்காட்டி முஸ்லிம் தலைவர்கள் தமக்கு தேவையானவைகளுக்கு அத்திவாரமிட்டுக் கொண்டார்கள்.
முஸ்லிம் அடிப்படைவாதிகள் ஷரீஆ வங்கியை நிறுவிக்கொண்டதுடன் பிரிவினை வாதத்தை ஆதரிக்கின்றார்கள். இப்போது கிழக்கில் தங்களுக்கென தனியான நிர்வாக மாவட்டம் வேண்டும் எனக் கேட்கின்றார்கள். ஆனால் எமது அரசியல்வாதிகள் எதுவும் பேசுகின்றார்கள் இல்லை. ஆட்சியாளர்களும் அமைதியாகவே இருக்கின்றார்கள். அதனால் நாம் இவ்விடயங்களில் தலையிட வேண்டியுள்ளது என்றார்.(vi)


Sri Lanka Rupee Exchange Rate