விமல் வீரவன்சவின் வீட்டில் இடம்பெற்றுள்ள மகிந்தவின் இரகசிய பேச்சுவார்த்தை
எதிர்வரும் பொது தேர்தல் நடவடிக்கை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, சுதந்திர கட்சி மற்றும் கூட்டணியின் அரசியல் கட்சிகள் பலவற்றின்...
http://kandyskynews.blogspot.com/2015/06/blog-post_401.html
எதிர்வரும் பொது தேர்தல் நடவடிக்கை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, சுதந்திர கட்சி மற்றும் கூட்டணியின் அரசியல் கட்சிகள் பலவற்றின் பிரதிநிதிகளுடன் இரகசிய பேச்சுவார்த்தைகள் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேசிய சுதந்திர முன்னணி தலைவர் விமல் வீரவன்சவின் வீட்டில் இடம்பெற்றுள்ள இக்கூட்டத்திற்கு கூட்டணியின் பொது செயலாளர் சுசில் பிரேமஜயந்தவும் கலந்து கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
பந்துல குணவர்தன, டீ.பீ.ஏக்கநாயக்க, சீ.பீ.ரத்நாயக்க, குமார வெல்கம உட்பட பலர் குறித்த கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.
கட்சியின் குழப்பகரமான நிலைமை தொடர்பில் கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளதுடன், மேலும் கூட்டணியில் மஹிந்தவை பிரதமாராக்கும் கோரிக்கையை கைவிட்டு வேறு கட்சி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கு கூட்டணியின் பொது செயலாளர் சுசில் பிரேஜயந்தவும் இணக்கம் தெரிவித்துள்ளதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.


Sri Lanka Rupee Exchange Rate