சிவப்பு அட்டையோடு வெளியேறினார் நெய்மர்! பிரேசில் அதிர்ச்சித் தோல்வி
பிரேசில், கொலம்பிய அணிகள் மோதிய கோபா அமெரிக்க கால்பந்து லீக் போட்டி மோதலுடன் முடிந்தது. இதில் பிரேசில் அணித்தலைவர் நெய்மருக்கு சிவப்பு அட்...

பிரேசில், கொலம்பிய அணிகள் மோதிய கோபா அமெரிக்க கால்பந்து லீக் போட்டி மோதலுடன் முடிந்தது. இதில் பிரேசில் அணித்தலைவர் நெய்மருக்கு சிவப்பு அட்டை கிடைத்தது.
தென் அமெரிக்க நாடுகள் பங்கேற்கும் 44வது கோபா அமெரிக்க கால்பந்து தொடர் சிலியில் நடக்கிறது. இதில் சாண்டியாகோவில் நடந்த ‘சி’ பிரிவு லீக் போட்டியில் 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற பிரேசில், கொலம்பியா அணிகள் மோதின.
கடந்த 2014 உலக கோப்பை தொடர் காலிறுதியில் பிரேசிலிடம் (2–1) கொலம்பியா தோற்றிருந்தது. தவிர, இப்போட்டியில் கோலம்பியாவின் ஜூனிகா, நெய்மர் முதுகுத்தண்டு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதனால் இந்த இரு அணிகள் மோதிய கோபா அமெரிக்க லீக் போட்டி பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. போட்டியின் 36வது நிமிடத்தில் மொரில்லா ஒரு கோல் அடிக்க கொலம்பியா 1–0 என முன்னிலை பெற்றது. 43வது நிமிடம் தேவையில்லாமல் பந்தை கையில் எடுத்த நெய்மருக்கு மஞ்சள் அட்டை கிடைத்தது. முடிவில் 1–0 என கொலம்பியா வெற்றி பெற்றது. கடந்த 1991க்குப் பின் கொலம்பிய அணி பிரேசிலை இப்போது தான் வென்றது.
போட்டி முடிந்தவுடன் நெய்மர் அடித்த பந்து எதிரணியின் ஆஸ்பினா மீது பட்டது. இதுகுறித்து கேட்ட மொரில்லோ தலை மீது, தனது தலையால் மோதினார் நெய்மர்.
உடனே அங்கிருந்த பாக்கா ஓடிவந்து நெய்மர் முதுகில் கையை வைத்து வேகமாக கீழே தள்ளிவிட்டார். நிலைதடுமாறிய நெய்மர் உடனடியாக சுதாரித்துக் கொண்டார்.
பின் இரு அணி வீரர்களுக்குள் விவாதம் ஏற்பட்டது. இவ் விஷயத்தில் நெய்மர், பாக்காவுக்கு மஞ்சள் அட்டை கிடைத்தது. அடுத்தடுத்து இரு முறை இப்படி நடந்ததால், உடனடியாக இருவருக்கும் சிவப்பு அட்டை காட்டப்பட்டது.
இதனால் வெனிசுலாவுக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் நெய்மர் பங்கேற்க முடியாத நிலை உள்ளது. இதனால் பிரேசிலின் அடுத்த சுற்று வாய்ப்பு கேள்விக்குறியாக உள்ளது.