சிறிலங்கா கடற்பரப்பில் அமெரிக்க கொமாண்டோ படையணி!
சிறிலங்கா கடற்படையுடனான போர்ப் பயிற்சிகளை அமெரிக்க கடற்படை மீண்டும் ஆரம்பித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. மஹிந்த...
http://kandyskynews.blogspot.com/2015/06/blog-post_790.html
சிறிலங்கா கடற்படையுடனான போர்ப் பயிற்சிகளை அமெரிக்க கடற்படை மீண்டும் ஆரம்பித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தின் போது இடைநிறுத்தப்பட்டிருந்த போர்ப் பயிற்சிகளை அமெரிக்க கடற்படை மீண்டும் ஆரம்பித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் ஆட்சிக்காலத்தில் விரிவாக்கப்பட்ட உறவுகள் திட்டத்தில், சிறிலங்காவையும் அமெரிக்கா உள்வாங்கியிருந்தது.
எனினும், கடந்த அரசாங்கம் போர்க்குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டமையால் சர்வதேச ரீதியாக பல சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது. இதனையடுத்து சிறிலங்காவுடனான அனைத்து போர்ப் பயிற்சிகளையும் அமெரிக்கா இடைநிறுத்தியிருந்தது.
சிறிலங்காவில் தற்போது ஆட்சிமாற்றம் ஏற்பட்டுள்ளதையடுத்து மீண்டும் கூட்டுப் போர்ப்பயிற்சியில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது.
திருகோணமலைக்கு அப்பாலுள்ள கடலில், சிறிலங்கா கடற்படையின் எஸ்பிஎஸ் எனப்படும், சிறப்பு படகுப் படையணி மற்றும் அதிகவேகத் தாக்குதல் படகு அணிகளுடன் அமெரிக்க கடற்படை கடந்த 19ஆம் திகதி தொடக்கம் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.
அமெரிக்க – சிறிலங்கா ஒத்துழைப்பு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதை, சிறிலங்கா கடற்படைத் தலைமையகம் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்தப் போர்ப் பயிற்சியில், அமெரிக்க கடற்படையின் சீல் எனப்படும் கொமாண்டோ அணி பங்கேற்கிறது.


Sri Lanka Rupee Exchange Rate