சவூதியில் 431 பேர் கைது
ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் தொடர்புடைய அமைப்பொன்றை முறியடித்து அந்த அமைப்பைச் சேர்ந்த 431 உறுப்பினர்களைக் கைதுசெய்துள்ளதாக சவூத...


ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் தொடர்புடைய அமைப்பொன்றை முறியடித்து அந்த அமைப்பைச் சேர்ந்த 431 உறுப்பினர்களைக் கைதுசெய்துள்ளதாக சவூதி அதிகாரிகள் சனிக்கிழமை அறிவித்துள்ளனர்.
மேற்படி குழுவினர் சவூதி அரேபியாவின் கிழக்கு மாகாணத்திலுள்ள பள்ளிவாசல்களை இலக்குவைத்து நடத்தப்பட்ட மிக மோசமான தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் உள்ளடங்கலான பல தாக்குதல்களுடன் தொடர்புபட்டிருந்ததாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
அவர்கள் சவூதியில் பிரிவினைவாத வன்முறைகளை தூண்டி பதற்ற நிலையை ஏற்படு த்த சதித் திட்டம் தீட்டியிருந்ததாக கூறப்படுகிறது.