முன்னாள் ஜனாதிபதி பங்கேற்ற நிகழ்விற்கு 132 இலட்சம் ரூபா செலவு: விசாரணைகள் ஆரம்பம்
கடந்த தேர்தலுக்கு முன்னர் கடற்றொழில் அமைச்சு மற்றும் கடற்றொழில் கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் ஜனாதிபதி ...


கடந்த தேர்தலுக்கு முன்னர் கடற்றொழில் அமைச்சு மற்றும் கடற்றொழில் கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு இன்று விசாரணைகளை முன்னெடுத்தது.
2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 4 ஆம் திகதி நீர்கொழும்பு கலப்பு அபிவிருத்தித் திட்டத்தின் நினைவுப் பலகையைத் திறந்து வைக்கும் நிகழ்விற்கு செலவிடப்பட்ட நிதி தொடர்பில் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று ஆரம்பமான விசாரணையின் போது கவனம் செலுத்தப்பட்டது.
முன்னாள் ஜனாதிபதி பங்கேற்ற இந்த நிகழ்விற்கு 132 இலட்சம் ரூபா செலவு செய்யப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.