இலங்கை வரும் மோடி மகிந்த ராஜபக்சவுடன் இரகசிய சந்திப்பு? -இந்திய ஊடகம்
இலங்கை வரும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சேவை ரகசியமாக நேரில் சந்தித்து பேசக் கூடும் என இந்திய ஊடகம் செய்த...


இலங்கை வரும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சேவை ரகசியமாக நேரில் சந்தித்து பேசக் கூடும் என இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையில் நடந்த போரின்போது வாழ்வாதாரத்தை இழந்த தமிழர்களுக்கு இந்தியா கட்டி கொடுத்துள்ள வீடுகளை பிரதமர் மோடி ஒப்படைக்க உள்ளார்.
இது தவிர பல ஒப்பந்தங்களிலும் மோடி கையெழுத்திட உள்ளார். இந்த பயணத்தின் போது இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கா, எதிர்க்கட்சி தலைவர் நிமல் ஸ்ரீபால் டீ சில்வா ஆகியோரை மோடி சந்திக்க உள்ளார்.
மேலும் இலங்கையின் முக்கிய அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து பேசவும் மோடி நேரம் ஒதுக்கியுள்ளார். இந்த நிலையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சேவும் பிரதமர் மோடியை சந்தித்து பேச தீவிரமாக முயன்று வருவதாக தெரிய வந்துள்ளது.