கட்டார் வாகன விபத்தில் பலியான மூன்று பேரும் இலங்கையர்களா?
கட்டாரில் இடம்பெற்ற விபத்தொன்றில் மூவர் உயிரிழந்துள்ளனர். நேற்று முன்தினம் சிறிய ரக வேன் ஒன்று விபத்துக்குள்ளானதில் இவர்கள் உயிரிழந்துள்ளதாக...
http://kandyskynews.blogspot.com/2015/01/blog-post_714.html

கட்டாரில் இடம்பெற்ற விபத்தொன்றில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று முன்தினம் சிறிய ரக வேன் ஒன்று விபத்துக்குள்ளானதில் இவர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இவர்கள் இலங்கையிலிருந்து தொழில் நிமித்தம் கட்டாருக்கு சென்றவர்களாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்து தொடர்பாக வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் மங்கள ரன்தெனியவிடம் வினவியபோது, இலங்கை பணியாளர் ஒருவர் இந்த விபத்தில் உயிரிழந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.
விபத்துக்குள்ளான வாகனம் தீபற்றியதில் உயிரிழந்த ஏனைய இருவரது சடலங்களும் கருகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இதனால் விபத்தில் பலியான ஏனைய இருவரையும் அடையாளம் காண்பதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.
குறித்த இரண்டு சடலங்களும் விபத்தில் உயிரிழந்த இலங்கையரின் நண்பர்களுடையதாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்


Sri Lanka Rupee Exchange Rate