உலகளவில் அதிக வயதான பெண்மணி: 116-வது பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடிய நெகிழ்ச்சி சம்பவம்

உலகளவில் அதிக வயதான அமெரிக்காவை சேர்ந்த பெண்மணி ஒருவர் தன்னுடைய 116-வது பிறந்த நாளை நேற்று தனது குடும்பத்தினருடன் கோலாகலமாக கொண்டாடியுள்ளார...

susannah_mushatt_jones_001
உலகளவில் அதிக வயதான அமெரிக்காவை சேர்ந்த பெண்மணி ஒருவர் தன்னுடைய 116-வது பிறந்த நாளை நேற்று தனது குடும்பத்தினருடன் கோலாகலமாக கொண்டாடியுள்ளார்.
அமெரிக்காவின் புரூக்லின் நகரில் வரும் Susannah Mushatt Jones என்ற 116 வயதுடைய பெண்மணி தான் தற்போது கின்னஸ் நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள அதிக வயதான பெண்மணி ஆவார்.
அலபாமா மாகாணத்தில் கடந்த 1899ம் ஆண்டு பிறந்த அவர், குழந்தைகளை பராமரிப்பது மற்றும் வீட்டு வேலைகளை பார்ப்பது உள்ளிட்ட பணிகளிலிருந்து கடந்த 1965ம் ஆண்டில் ஓய்வு பெற்றுள்ளார்.
புரூக்லினில் உள்ள தனது குடும்பத்தினருடன் நேற்று தனது 116-வது பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடிய அவருக்கு இதுவரை குழந்தைகள் பிறக்கவில்லை.
அதிக வயதுடன் வாழ்வதற்கு முக்கியமாக என்ன காரணம் என அவரிடம் கேட்டபோது, ‘அதிக நேரமாக நிம்மதியுடன் தூங்குவது தான் தன்னுடைய அதிக வயதிற்கு காரணம்’ என பதிலளித்துள்ளார்.

மூப்பியல் தொடர்பாக ஆராய்ச்சியை நடத்தி வரும் Robert Young என்பவர் கூறுகையில், சூசன்னா அதிக வயதுடன் வாழ்வதற்கு மற்றொரு முக்கிய காரணம், ‘அவர் இது வரை சிகரெட் மற்றும் மதுவை குடித்ததே இல்லை’ என கூறியுள்ளார்.
மிச்சிகன் நாட்டில் வசித்து வந்த Jeralean Talley என்ற 116 வயதுடைய நபர் தான் இதுவரை அதிக வயதான நபராக இருந்துள்ளார். இவர், கடந்த யூன் 17ம் திகதி இறந்ததும், தற்போது அதிக வயதுடைய நபர் என்ற புகழ் கின்னஸ் நிறுவனத்தால் சூசன்னாவிற்கு வழங்கப்பட்டு உள்ளது.
சூசன்னாவிற்கு அடுத்தப்படியாக இத்தாலியில் வசித்து வரும் Emma Morano-Martinuzzi என்ற பெண்மணி உலக அளவில் இரண்டாவதாக அதிக வயதுடன் வசித்து வருகிறார்.
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த Jeanne Calment என்ற நபரின் வயதை இன்னும் யாரும் முறியடிக்கவில்ல. அந்த நபர் தனது 122 வயது 164 நாட்களில் கடந்த 1997ம் ஆண்டு இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related

ஹிட்லர் போல் ‘சல்யூட்’ வைத்த பிரித்தானிய மகாராணி: நாடு முழுவதும் அதிர்ச்சியை கிளப்பிய புகைப்படங்கள்

பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் தன்னுடைய 6 வயதில், ஜேர்மனி சர்வாதிகாரி ஹிட்லரின் நாசிச வணக்கத்தை செலுத்துவது போல் உள்ள புகைப்படங்கள், தற்போது வெளியாகி நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள...

உயிரை காத்துக்கொள்ள கதறி அழுத நபர்: குற்றவாளி என கருதி தவறுதலாக சுட்டுக்கொன்ற 3 பொலிசார்

கனடா நாட்டில் நள்ளிரவு வேளையில் நபர் ஒருவரை குற்றவாளி என தவறுதலாக கருதி 3 பொலிசார் கொடூரமாக சித்ரவதை செய்து சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் உள்ள தெற்கு Surrey நகரில் தான...

புனித மாதத்தில் ரத்த பூமியாக மாறிய சிரியா: 5,000 பேர் பலியான கொடூரம்

சிரியாவில் ரம்ஜான் மாதத்தில் மட்டும் 5,000 பேர் பலியாகியுள்ளதாக மனித உரிமை மீறல் தொடர்பாக கண்காணிக்கும் குழு தெரிவித்துள்ளது. பிரித்தானியாவை தலைமையமாக கொண்டு செயல்பட்டு வரும் எஸ்.ஓ.எச்.ஆர் (Syrian Ob...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item