சுதந்திர கட்சியை மஹிந்தவினால் மாத்திரமே பாதுகாக்க முடியும்: கருணா
பிரதமர் வேட்பாளராக மஹிந்த ராஜபக்சவை பெயரிட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரன் என்ற கருணா அம்மான் தெரிவித்துள்ளார். ...


பிரதமர் வேட்பாளராக மஹிந்த ராஜபக்சவை பெயரிட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரன் என்ற கருணா அம்மான் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுநத்திர கட்சியை பாதுகாப்புதற்கான திறன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் மாத்திரமே காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மஹிந்தவை பிரதமராக்கும் போராட்டத்திற்கு எனது முழுமையான ஆதரவை வழங்குவேன்.
ஒன்றின் பின் ஒன்றாக பலமுறை தோல்வியுற்ற ரணில் விக்ரமசிங்க தற்போது தன் கட்சி பாதுகாக்கும் வேலையை மாத்திரம் மேற்கொள்ள வேண்டும்.
தற்போது வரையில் அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் இவ்வாறான சூழ்நிலைக்கு திறமை மிக்க மஹிந்த ராஜபக்ச என்ற நபரே பொறுத்தமானவர்.
மஹிந்த ராஜபக்சவுக்கு வேட்பு மனு வழங்க முடியாதென அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன வெளியிட்ட போலியான கருத்துக்களை அவர் மூலமாகவே நாட்டிற்கு வெளிபடுத்த வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.