எனது கைகள் சுத்தமானவை: பவித்ரா வன்னியாராச்சி
நான் இலஞ்சம் பெற்றதாகவும், அரசாங்க பணத்தை மோசடி செய்ததாகவும் குற்றம் சுமத்தினார்கள், ஆனால் எனது கைகள் சுத்தமானவை, நான் எந்த ஒரு சந்தர்ப்பத...


கலவான பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் இன்று நெருக்கடியான அரசியல் நிலை ஒன்று உருவாகியுள்ளது. அபிவிருத்திகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது. சிறுபான்மை கட்சிகள் அரசாங்கத்தை ஆட்சி செய்கின்றது.
எனக்கு நல்லாட்சி அரசாங்கம் அமைச்சர் பதவியை பெற்றுக்கொள்ளுமாறு கோரியது. எனது கட்சியின் உத்தியோகபூர்வ தீர்மானத்திற்கமைய நானும் பெற்றுக்கொண்டேன்.
மக்கள் நினைத்தார்கள் நான் ஐக்கிய தேசியக் கட்சிக்கு சென்று விட்டதாக, நான் அப்படி கட்சி மாறவில்லை. ஒரு போதும் நான் மாறவும் மாட்டேன்.
இறுதியில் மக்களின் கொள்கைக்கு மதிப்பளித்து எனது பதவியை இராஜினாமா செய்துகொண்டேன். யார் என்ன சொன்னாலும் மஹிந்த ராஜபக்சவை சுற்றி மக்கள் கூட்டம் நிறைந்துள்ளது.
ஓய்வு பெற சென்ற மஹிந்தவை மீண்டும் அரசியலுக்கு வருமாறு அழைப்பது இந்த 58 லட்ச மக்களே என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.