யாழ் சுன்னாகத்தில் நீண்ட நாட்களாக இடம்பெறும் குழு மோதல் தொடர்பில் ஐவர் கைது
யாழ் சுன்னாகம் பகுதியில் நீண்ட நாட்களாக இரு குழுக்களுக்கிடையே இடம்பெற்றுவரும் மோதல் தொடர்பில் ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ...
http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_965.html

யாழ் சுன்னாகம் பகுதியில் நீண்ட நாட்களாக இரு குழுக்களுக்கிடையே இடம்பெற்றுவரும் மோதல் தொடர்பில் ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுன்னாகம் நகரிலுள்ள இரு கடை உரிமையாளர்கள் மற்றும் கடையில் தொழில் புரிவோருக்கு இடையிலான மோதலில், ஒரு குழுவினர் நேற்று மாலை தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்த போது கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் சேசாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.
கைது செய்யப்பட்டுள்ள ஐந்து சந்தேகநபர்களையும் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தாக்குதல் மேற்கொள்வதற்கு கொண்டு செல்லப்பட்ட இரண்டு பெற்றோல் குண்டுகள், இரண்டு வால்கள், கைகோடரி மற்றும் பொல்லுகள் போன்றன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Sri Lanka Rupee Exchange Rate